தென்னாப்பிரிக்காவை நோக்கி பயணமாகும் இலங்கை அணி!
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி இன்று (03-02-2023) அதிகாலை தென்னாப்பிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.
சமரி அத்தபத்து தலைமையிலான அணியே தென்னாப்பிரிக்கா நோக்கி பயணமாகவுள்ளது.
இந்த இலங்கை அணி குழாமில் இறுதி நேரத்தில் ஹசினி பெரேரா விலகினார்.
பயிற்சிகளின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சத்யா சங்தீபனி இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.