தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க உள்ள இலங்கை பெண்ணான ஜனனி!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6.
இதற்கு முன் ஒளிபரப்பான 5 சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் கடைசியாக அசல் கோளாறு வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிபடுத்தும் படியான டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜனனி பாடல் ஒன்று நடனமாடி இருக்கிறார், ஆனால் தற்போது அவர் வெளிபடுத்திய நடனம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.
ஜனனியின் அந்த நடன காணொளியை கண்ட ரசிகர் ஒருவர் ஜனனி இந்த வருட பிக்பாஸின் கண்டுபிடிப்பாக இருக்க போகிறார் என கூறியுள்ளனர்.
ஏற்கனவே இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெரிய திரையில் பிரபலங்களாக கலக்கி வருபவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்குபெற்ற இலங்கை தமிழர்களான லொஸ்லியா மற்றும் தர்ஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரைப்படத்திலும் நடித்தினர். குறித்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 யில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள இலங்கைப் பெண்ணான ஜனனியும் பெரிய திரையில் வருவரான எதிர்பார்க்கப்படுகின்றது.