லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இலங்கைப் பெண் காயம்!
இஸ்ரேல் , லெபனான் மீது நேற்று (08) நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

10 நிமிடங்களுக்குள் பாரிய வான்வழித் தாக்குதல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் 10 நிமிடங்களுக்குள் லெபனான் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நாளை வெள்ளிக்கிழமை (10) இடம்பெறும் நிலையில் லெபனான் மீதான தாக்குதல் , மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.