முதல் முறையாக இலங்கை பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த உயரிய பதவி!
இலங்கையில் பிறந்த மினோலி பெரேராவை (Menoli Perera) சிம்பாப்வே நாட்டுக்கான அவுஸ்திரேலிய தூதுவராக அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது.
கென்பராவில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானிஸூடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிம்பாப்வேவுக்கான அவுஸ்திரேலிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மினோலி பெரேரா, கொங்கோ, மலாவி, செம்பியா, மற்றும் கொங்கோ-பிரஸ்ஸாவில்லி ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலியாவின் ராஜதந்திரியாக செயற்படுவார்.
இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நியமனம் பெற்ற முதலாவது தூதுவர் இவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.