பிரான்ஸ் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நடுவானில் நேர்ந்த துயரம்!
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
81 வயதுடைய இலங்கைப் பெண்
முன் அறிவிப்புகளின்படி, மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன, எனினும் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் தங்கியிருந்த 81 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவரது மகனுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.