சர்வதேச கிரிக்கெட் உலகின் பாராட்டைப் பெற்ற இலங்கை நடுவர்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நடுவராக பணியாற்றிய இலங்கையின் குமார் தர்மசேன சர்வதேச கிரிக்கெட் உலகின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
போட்டியின் முக்கிய தருணங்களில் இரு அணிகளும் DRS (Review) மூலம் நடுவர் தீர்ப்புகளை சவாலுக்கு உட்படுத்தின.

முன்னணி நடுவர்
ஆனால் ஒவ்வொரு முறைமையும் தொழில்நுட்பத்தை விட தனது அனுபவமும் கூர்மையான பார்வையும் சரியானது என்பதை தர்மசேன நிரூபித்தார்.
பரப்பான, உயர் அழுத்த சூழ்நிலையிலும் துல்லியமாக நின்ற அவரது தொழில்முறை முதிர்ச்சி, கிரிக்கட் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் உலகக் கோப்பையை வென்ற வீரராகவும், பின்னர் உலகின் சிறந்த நடுவராகவும் உயர்ந்த தர்மசேன இன்னும் சர்வதேச தரத்தில் முன்னணி நடுவராக விளங்குகிறார்