மியன்மாருக்கு சென்ற இலங்கையின் சிறப்புக் குழு !
மியான்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் மியான்மார் சென்றதை இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
26 முப்படை வீரர்களைக் கொண்ட சேவைக் குழு
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று (05), விசேட விமானத்தில் மியன்மாருக்கு புறப்பட்டுச் சென்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் (ஓய்வு பெற்ற) முழு மேற்பார்வையின் கீழ் அனர்த்த நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை மிகக் குறுகிய காலத்தில் முப்படைத் தளபதிகளின் தலைமையில் இந்த விசேட அனர்த்த நிவாரண சேவைப் குழு தயார்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்