இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) அமெரிக்க டொலருக்கு நிகரான சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இது தெரியவந்துள்ளது. மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி ,
இன்று நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 72 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 41 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 372 ரூபா 74 சதம்.
தனியார் நிதி நிறுவனத்தில் அடகு நகையை மீட்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; தமிழர் பகுதியில் சம்பவம்!
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 14 சதம், விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 55 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 58 சதம், விற்பனைப் பெறுமதி 330 ரூபாய் 86 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 93 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 57 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபாய் 55 சதம், விற்பனைப் பெறுமதி 187 ரூபாய் 91 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 219 ரூபாய் 61 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.