யாழ் கச்சதீவில் கால் பதித்த இலங்கை ஜனாதிபதி
யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார்.
அபிவிருத்தி திட்டங்கள்
குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார்.
ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார்.
மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.