மக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்! வெளியான புகைப்படங்கள்
நாடாளுமன்றத்தில் அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்த விடயம் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாண குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி மூலம் இனங்காணப்பட்ட மற்றும் கலவரமாக நடந்து கொண்ட, இதுவரை அடையாளம் காணப்படாத மேலும் 23 சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலே படங்களில் காட்டப்பட்டுள்ள நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள் -
0112 829 388, 071 30 64 165, 071 85 92 209