ஜப்பான் கப்பல்களை வரவேற்ற இலங்கை கடற்படையினர்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்களை இலங்கை கடற்படையினர் சல்யூட் அடித்து வரவேற்றனர்.
முரசமே(MURASAME), காகா(KAGA) மற்றும் பியூஸுகி(FUYUZUKI) என மூன்று பாரிய கப்பல்கள் தான் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பல்களாகும்.
இது தொடர்பாக ஜப்பான் தூதரகம் தெரிவிக்கையில், இரு நாட்டின் ஒத்துழைப்பை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என தெரிவித்திருந்தது. மொத்தம் 220 கப்பல் பணியாளர்களுடன் வந்துள்ள பியூஸுகி கப்பல் இன்று நாட்டிலிருந்து செல்லவுள்ளது.
இது சுமார் 151 மீற்றர் நீளம் கொண்டாய் கப்பலாகும்.
பசிபிக் வலயத்தின் மற்ற நாடுகளுடன் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து , அவுஸ்திரெலிவில் இருந்து முரசமே மற்றும் காகா கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.
இந்த கப்பல்கள் ‘JA- LAN EX’ எனப்படும் இலங்கை கடற்படையோடு இணைந்து பயிற்சியில் ஈடிபடவுள்ளன.