நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை!

Indian fishermen Sri Lanka Navy
By Shankar Feb 23, 2023 07:53 PM GMT
Report

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை! | Sri Lankan Navy Attacked Tamil Nadu Fishermen Sea

மயிலாடுதுறை - தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் திகதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இன்று (23-02-2023) அதிகாலை காரைக்கால் தென் கிழக்கு 44 நாட்டிகல் மைல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்திய இலங்கை கடற்படை! | Sri Lankan Navy Attacked Tamil Nadu Fishermen Sea

இதில் 5 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின் மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு தங்களை மோசமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

படுகாயம் அடைந்த 5  மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் பொலிஸாரிடம் மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US