ஜனாதிபதி அனுரவுக்கு சூனியம் வைக்கும் தேரர்கள்; இரவிரவாக பூஜை!
இலங்கையின் ஆட்சியாளர்கள் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார தலமையிலான அரசாங்கம், நாட்டில் அனைத்து மக்களும் சரிசமம் என , மக்கள் பணிகளை திறப்பட செய்து வருகின்றமை பௌத்த மத வெறியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு இலங்கையை ஆட்சி செய்தவர்கள், மதம் மற்றும் மொழியை முன்னிறுத்தி இலங்கை பௌத்த நாடு என , மக்களிடையே இஅன முறுகல்களை தூண்டி விட்டு ஆட்சி நடத்தி வந்த நிலையில், நஜனாதிபதி அனுர குமாரவின் ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாகவே செயல்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி அனுரவின் ஆட்சியை வெறுக்கும் தேரர்கள்
இதன் காரணமாக இலங்க்கையின் மூவின மக்கள் மத்தியிலும் ஜனாதிபதி அனுரவின் செல்வாக்கு ஓங்கியுள்ளது. இது கடந்தகால ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாது , பௌத்த தேரர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் பௌத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வாட்டை ஆண்டதுடன், பௌத்த தேரர்களின் ஆசைக்கிணங்க அவர்களின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தனர். இதனால் காவியுடை துறவிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

இன்னிலையில் தற்போதையை ஜனாதிபதி அனுரவின் ஆட்சியை வெறுக்கும் தேரர்கள் சிலர் நேற்றையதினம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆட்சியாளர்களை தண்டிக்கச் செய்யக்கோரி சூனிய வழிபாடு நடத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற புகைபடங்க்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
