ரசிகர்களின் கண்ணை கவரும் அழகு... புடவையில் இலங்கைப் பெண் ஜனனி வெளியிட்ட காணொளி!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 6 சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடந்த மாதம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் இலங்கைப் பெண் லாஸ்லியா கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இதனால் அவருக்கு திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து குறித்த இரு திரைப்படங்களும் திரையில் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது.
இதேவேளை, தற்போது இன்ஸ்டாகிராமில் ஆர்வம் காட்டிவரும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோயை வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான நிலையில் லாஸ்லியாவை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 யில் இலங்கைப் பெண்ணான ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார்.
இவரும் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார்.
ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கும் நடிகர் விஜயின் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன.
இவ்வாறான நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்துவரும் ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரோஸ் நிற புடவையில் காணொளி ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.