பிரித்தானியாவில் காதலியை காரால் மோதிய இலங்கை மாணவனுக்கு நேர்ந்த கதி!
பிரித்தானியாவில் தனது காதலியை காரால் மோதி படுகாயப்படுத்திய இலங்கை இளைஞனுக்கு நீதிமன்றம் 11 வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் திகதி பக்கிங்ஹாம்ஷேர், லோஹ்வுட் லேனில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
19 வயதான டினா சப்ரா நீச்சல், வலைப்பந்து மற்றும் டென்னிஸ் வீராங்கனை. இலங்கையில் நடந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் 4 A சித்தி பெற்றார்.
சம்பவத்தன்று Lakshman Samarakoon மற்றும் Dina Sapra ஆகிய இருவரும் பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு தனித்தனியாக சென்றிருந்தனர். இந்த நிலையிலேயே Dina Sapra-ன் மொபைலில் ஆண் நண்பர் ஒருவரின் குறுந்தகவல் ஒன்றை Lakshman Samarakoon காண நேர்ந்துள்ளது.
சந்தேகம் உச்சமடைந்து விபரீதமானது 2020 ஜூலை 12 நள்ளிரவுக்குப் பின்னைய பொழுதில். நடைபாதையில் ஓடிச்சென்ற சப்ராவை நோக்கி காரை திருப்பி, விரட்டி சென்றுள்ளார். பின்னர் நடைபாதையில் காரை ஏற்றி சப்ராவை மோதி தள்ளினார். சப்ரா கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.ரிவி கமராவில் பதிவாகியிருந்தன.
இதில் ஆத்திரம் மற்றும் பொறாமை கொண்ட Lakshman Samarakoon மொபைலைப் பறித்துக் கொண்டு, தம்மை ஏமாற்றுவதாக Dina Sapra-வை கடுமையாக கண்டித்துள்ளார். தொடர்ந்து வாகனத்தை இயக்கிய Lakshman Samarakoon தமது காதலி மீது மோதி வீழ்த்தியதுடன் 999 இலக்கத்திற்கு அழைத்து தகவலும் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Lakshman Samarakoon-கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், விடுதலைக்கு பிறகு 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.