முக்கிய அறிக்கையை தயார் செய்யும் இலங்கை அரசாங்கம்!

United for Human Rights United Human Rights United Nations Dr Wijeyadasa Rajapakshe Government Of Sri Lanka
By Shankar Aug 11, 2022 06:29 PM GMT
Report

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக இலங்கையால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Dr. Wijeyadeasa Rajapaksa) தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முக்கிய அறிக்கையை தயார் செய்யும் இலங்கை அரசாங்கம்! | Sri Lankan Govt Will Prepare A Major Report Un

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்படுகின்ற உள்நாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் பங்குபற்றலுடன் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (!10-08-2022) இடம்பெற்றது.

முக்கிய அறிக்கையை தயார் செய்யும் இலங்கை அரசாங்கம்! | Sri Lankan Govt Will Prepare A Major Report Un

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மறுசீரமைப்பு என்பவற்றுக்குரிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

முக்கிய அறிக்கையை தயார் செய்யும் இலங்கை அரசாங்கம்! | Sri Lankan Govt Will Prepare A Major Report Un

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொறிமுறையொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரத்னம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே.லேனகல, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான பியூமந்திர பீரிஸ் (சட்டம்), ஆர்.பீ.எஸ்.சமன் குமாரி, ரோஹண ஹப்புகஸ்வத்த, அமைதி , நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜே.ஜே.ரத்னசிறி, அதன் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்  கலந்துகொண்டனர்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US