கொலையாளியை crish ஆக்கும் இலங்கை யுவதிகள் ; பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும் இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியாக கவலைகளை உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச்சூடுகளும், கொலைகளும் அனைவரையும் அச்சமடைய செய்து, மிகக் கவனமாக செயற்பட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிதாரி குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் படங்கள், காணொளிகள் மற்றும் செய்திகள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளன.
குறிப்பாக, இளைய தலைமுறையினர், சமூக ஊடகங்களில் புதுக்கடை துப்பாக்கிதாரியின் அழகை வர்ணித்து, அவரை தங்களது "Crush" (க்ரஷ்) எனவும் குறித்துக் கொண்டுள்ளனர்.
இது, இளம் பெண்களிடையே கொலைகாரர் தொடர்பான உணர்வுகள் மிகவும் கவலைக்கிடமான நிலைமைக்குக் கொண்டுவருகிறது.
பதின்ம வயது பெண்கள், கொலைக்காரரின் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரை அழகானவர் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இளம் தலைமுறையின் மனநிலை மற்றும் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் சமூக வலைதளங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியமாகியுள்ளது.
இளையவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் போது, அவர்கள் பொருள் மற்றும் எதிர்காலத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளாமல், உணர்வுகளை வெளிப்படுத்துவதாகத் தெரியவருகிறது.
மேலும், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிதாரி குறித்து பரப்பப்பட்ட போலியான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி. இதன் பின்னணியில் நவீன தொழில்நுட்பமான AI பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டதுடன், பொலிஸ் திணைக்களம் அதை போலியான காணொளி என வெளியிட்டது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சமூக வலைதளங்களில் செயற்படுவதை கவனமாக கண்காணித்து, சமூக பொறுப்புடன் செயல்படுவதன் மூலம், நாட்டின் சமூக, கல்வி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்யலாம்.