இலங்கை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நெகிழ்ச்சிகர செயல்!
அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம் நஜீப் தலைமையில் (16) தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் அட்டப்பள்ளம் அம்மன் கோயில் முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றிருந்தது.
இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் இடம்பெற்ற , சங்கீத கதிரை நிகழ்ச்சி அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், இறுதிவரை முன்னேறிய நிந்தவூர் பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விஜிதா மற்றும் அவருடன் ஒரு போட்டியாளர் கலந்து கொண்டார்.
விட்டுக்கொடுக்கும் மனித நேயம்
சங்கீத கதிரை நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் கதிரையில் இரண்டு பேர்களும் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். இதனையடுத்து போட்டியின் நடுவர்கள் இதற்குரிய தீர்ப்பினை வழங்க முடியாமல் மீண்டும் போட்டியினை தொடர்வதாக அறிவித்தார்.
இருவம் மீண்டும் கதிரையில் இருக்க, மீண்டும் கீழே விழுந்தனர். மீண்டும் போட்டியினை ஆரம்பிப்பதற்கு நடுவர் அறிவித்த இருந்த பொழுது தான் இந்த போட்டியின் வெற்றியினை சக போட்டியாளருக்கு வழங்குவதாக கூறிச் சென்றார்.
இதன் பிறகு, பலூன் உடைக்கும் போட்டி நிகழ்ச்சியிலும் அபெ பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மூன்றாவது இடத்தினை பெற்றதுடன் அவருக்கு கிடைத்த பெறுமதியான பரிசினையும், தன்னுடன் இணைந்து போட்டியிட்ட சக போட்டியாளருக்கு வழங்கி "வீசின கையும் வெறுங்கையுமாக" சென்றார்.
இந்நிலையில் குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விஜிதாவுக்கு மீண்டும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.