பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண் மருத்துவர்; வெளியான தகவல்
பிரித்தானியாவின் மார்கேட் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் மருத்துவர் திருஷிகா சத்தியலிங்கம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. கடந்த 11ஆம் திகதி நண்பர்களுடன் இரவு நேர நீச்சலுக்கு சென்ற திருஷிகா சத்தியலிங்கம், மார்கேட் கரையில் சடலமாக கரையொதுங்கினார்.
26 வயதுடைய திருஷிகா, சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் சென்ற நிலையில் அவரது தோழிகள் ஹோட்டலுக்கு திரும்பிய நிலையில், திருஷிகாவின் சடலம் அதிகாலை 3 மணியளவில் மீட்கப்பட்டது.
திருஷிகா Queen Elizabeth The Queen Mother மருத்துமனையில் இளநிலை வைத்தியராக பணிபுரிந்து வந்துள்ளார். அத்துடன் அவரது சகோதரன் கௌசல்யனும் அதே வைத்தியசாலையில் இளநிலை வைத்தியராக பணிபுரிகிறார். இவருடைய தந்தை சத்தியலிங்கம் அதே வைத்தியசாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். அவரைப் போலவே திருஷிகா மயக்க மருந்து நிபுணராக மாற விரும்பியதாக கூறப்படுகின்றது.
லாட்வியாவில் உள்ள ரிகா ஸ்ட்ராடின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும் போது சந்தித்த Peter Speilbichler என்பவரை காதலித்துள்ளார் திருஷிகா. இவர்கள் ஒன்றாக ஆறு ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருஷிகா மறைவு தொடர்பில் அவர் கூறுகையில்,
அவள் எப்போதும் கனிவாகவும், புன்னகையுடனுமே இருப்பாள். எவ்வளவு கோபமாக இருந்தாலும், நான் அவளிடம் இருந்து எந்த ஒரு கெட்ட வார்த்தை கூட கேட்டதில்லை. நாங்கள் இருவரும் அந்தளவிற்கு நேசித்தோம் என வேதனையுடன் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.