கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலையாளி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்த கொலைகள் திட்டமிட்ட வகையில் நடத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒட்டாவா துயரச் சம்பவத்தின் சந்தேக நபரான ஃபேப்ரியோ டி சொய்சா [Febrio de- பாதிக்கப்பட்டவர்களுடன் வாழ்ந்து வந்ததுடன், அவர்களுடன் அண்மையில் தனது 19ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
ட்டின் நிலத்தடி தளத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் மாணவன் தங்கியிருந்துள்ளார்.
சொய்சாவின் தற்கொலை நடத்தை
முன் குற்றவியல் பதிவு இல்லாத போதிலும், அவர் பள்ளியில் சவால்களை எதிர்கொண்டார் மற்றும் தற்கொலை நடத்தையை வெளிப்படுத்தினார் என அவரின் கல்வி கற்ற இடத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு முன்னர் குடும்பத்திற்கும் டி-சொய்சாவிற்கும் இடையில் வெளிப்படையான பிரச்சினைகள் எதுவும் எதுவும் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் இருந்த போது டி சொய்சாவின் பெற்றோரை கூட சந்தித்து பழகியதாக கூறப்படுகிறது.
கல்லூரிக்கு செல்லும் காலப்பகுதி
அவர் மீது 6 முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் மாணவர் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ள நிலையில், அவர் கல்லூரிக்கு செல்லும் காலப்பகுதிகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.