இலங்கையின் மூத்த நகைச்சுவை நடிகரான பேர்ட்டி குணதிலக காலமானார்!
இலங்கையின் மூத்த நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக (Berty Gunathilake) இன்று (06-03-2022) காலை தனது 97 ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் எல்லா காலத்திலும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘வினோத சமய’வில் அவரது அசாத்தியமான நடிப்பிற்காக அறியப்பட்ட குணதிலகே, ஒரு நடிகராக சினிமா, தொலைக்காட்சி மற்றும் நாடகத்துறையில் முன்னோடியாக இருந்தார்.'
Veteran actor & comedian Berty Gunathilake passed away at the age of 98 years. #Lka pic.twitter.com/GX8CloZGw7
— Manjula Basnayake (@BasnayakeM) March 6, 2022
இந்நிலையில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட பேர்ட்டி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.
இந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.