பிறந்தநாளை இலங்கை பெண் லாஸ்லியா எப்படி கொண்டாடியிருக்கிறார் தெரியுமா? காணொளி
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா.
இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு அங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் பணியாற்றிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பிரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்திருந்தார்.
பிரண்ட்ஷிப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் தற்போது பிக் பாஸில் சக போட்டியாளரான தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் பிறந்தநாளை மிகவும் விமர்சையாக தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் லாஸ்லியா.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ஒரு தொகுப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.