கிரிக்கெட் வீரருக்கு சம்பவம் செய்த இலங்கையின் இளம் நடிகை ; அதிரடி காட்டிய பொலிஸார்
கிரிக்கெட் வீரர் ஒருவரின் தங்க சங்கிலி மோசடி வழக்கில் இளம் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

நீதிமன்றத்தில் முன்னிலை
தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளால், கிரிக்கெட் வீரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (29) குறித்த நடிகை கைது செய்யப்பட்டார்.
ரூ. 9 இலட்சத்திற்கும் அதிக மதிப்புடைய தங்கச் சங்கிலியை பெற்றுக்கொண்டு, அவருக்குத் தெரியாமல் அடகு வைத்து சுமார் ரூ. 6 இலட்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரின் தரப்பில் ஆஜரான சட்டதரணி, தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீட்டெடுத்து முறைப்பாட்டாளருக்கு திருப்பி கொடுக்க ஏற்பாடுகள் செய்ய முடியும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிரதி நீதிபதி சந்தேகநபரை ரூ. 5 இலட்சம் மதிப்பிலான இரு சரீர பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
மேலும், குறித்த தங்கச் சங்கிலியை பொலிஸார் கைப்பற்றி அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.