யால வனவிலங்கு பூங்காவில் பெண்களை கூட்டி யாகம் நடத்திய இளம் இராஜாங்க அமைச்சர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இளம் இராஜாங்க அமைச்சர் ஒருவர் யால வனவிலங்கு பூங்காவில் ஒரு பிரதேசத்தில் கடந்த 04-01-2022 ஆம் திகதி இரவு யாகம் ஒன்றை நடத்தியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், தந்தை வழியில் அரசியலுக்குள் பிரவேசித்த இந்த இராஜாங்க அமைச்சர், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவி உயர்வை எதிர்பார்த்து மற்றும் வேறு ஒரு காரணத்துக்காக இந்த யாகத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

குறித்த யாகத்தில் பூசாரிகள், இராஜாங்க அமைச்சரின் தந்தை, உறவுச் சகோதரர்கள் சிலரும், குடும்பத்துடன் நெருக்கமான பெண்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த யாகத்தில் பெரும்பாலும் பெண்கள் கலந்துகொள்ளச் செய்வதால் யாகம் வெற்றி பெற உதவும் என பூசாரிகள் கூறியுள்ளதாகவும் இந்த யாகம் (05-01-2022 அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாலை 6.00 மணிக்குப் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் யால வனத்துக்குள் செல்ல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.