இலங்கைக்கு வெளிநாடு ஒன்றிடம் இருந்து கிடைக்கவுள்ள 1 மில்லியன் மருத்துவ உதவிகள்!
பங்களாதேஷ் அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று (02) கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பங்களாதேஷின் எசென்ஷியல் டிரக்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் வழங்கப்படுகிறது.
அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அவற்றுள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பங்களாதேஷ் அரசு ஆர்வத்துடன் பதிலளித்து, இந்த மருந்துப் பொருட்களை மருத்துவ உதவியாக வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக தனது நன்றியை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், இலங்கையில் உள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக இரு நாடுகளுக்கும் இடையில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரச மட்டத்தில் நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.