13 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துக்கொண்ட பிக்குக்கு நேர்ந்த நிலை!
ஹைட்ரி குடியிருப்பு திட்டத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விகாராதிபதி கைது செய்யப்பட்டிருந்தார்.
வட்டவளை- ரொசல்ல ஹைட்ரி பகுதியிலுள்ள நேற்றைய தினம் திங்கட்கிழமை (21-02-2022) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த சிறுவனின் பெற்றோர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனை விகாரைக்குள் அழைத்தே விகாராதிபதியான பிக்கு துஷ்பிரயோகப்ப டுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவன் கிளங்கன் வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.