இலங்கையில் இடம்பெற்றது படுகொலை அல்ல! தேரர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இடம்பெற்றது போர் படுகொலை அல்ல. மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில்தான் போர் நடத்தப்பட்டது என இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முதுகலை கற்கைநெறி பீடாதிபதி பேராசிரியர் மொரகொல்லாகம உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (16-02-2022) அலரி மாளிகையில் ‘அமாதம் சிசிலச’ தர்ம உபதேசத் தொடரின் 219 ஆவது தர்ம உபதேசம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த பீடாதிபதி பேராசிரியர் மொரகொல்லாகம உபரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது, ‘முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் மாபெரும் யுத்தம் நடைபெற்றது.
அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaska) மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஆகியோருடன் நாட்டின் சகல இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த நாட்டின் அனைத்து மக்களின் ஆசியுடன் மாபெரும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மக்களை பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் இந்த போர் நடத்தப்பட்டது. இதனால் இந்த போர் படுகொலை அல்ல. ஆகையினால்தான் நாம் அனைவரும் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம்.
இன்று பௌர்ணமி தினத்தில் மேலும் நாட்டு மக்கள் சுதந்திரமாக வழிபாட்டில் ஈடுபடுவதற்கும் நாட்டில் பயணிப்பதற்கும் அன்று சிறந்த தலைமைத்துவத்துடன் செயற்பட்ட எமது ஜனாதிபதியினாலேயே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.