இலங்கை vs அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி ; ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு அர்ப்பணம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த அவுஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஷேன் வோர்ன் ஞாபகார்த்தமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் (SLC) சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சுகளுடன் இணைந்து செய்துள்ளது. இந்நிகழ்வில் ஷேன் வோர்னின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்பதை அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 29ஆம் திகதி முதல் ஜூலை 3ஆம் திகதி வரை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஷேன் வோர்ன், மார்ச் 4, 2022 அன்று தாய்லாந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .