வன்முறையின் போது கெஹலிய வீட்டிற்கு தீ வைத்த சந்தேகநபர்கள் சிக்கினர்!
கடந்த மே 9ம் திகதி அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதேவேளை கண்டியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீடும் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
முல்கம்பொல மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த 25, 29 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (15) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர். அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 24 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கண்டி பொலிஸாரும் மேற்கொள்ளவுள்ளனர்.