எம்.பி.க்களுக்கு தற்காலிக வீடுகள்: பிரதமர் ரணில் வெளியிட்ட விளக்கம்
இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (18-05-2022) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய பிரதமர்,
தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வீடுகள் வழங்கப்படுவதாகவும், அதேவேளை வீட்டின் உரிமை எம்.பி.க்களுக்கு மாற்றப்படாது என்றும் அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"Houses are being provided to those who lost their houses in the unrest as a temporary measure without any ownership, I am sure the SJB is not involved in those attacks as they spend their 24 hours thinking how to corner me" Prime Minister pic.twitter.com/BTr4zVeoco
— NewsWire ?? (@NewsWireLK) May 18, 2022
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகிய அமைதியின்மைகளை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இதே முறையில் வீடுகள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.