இலங்கையில் சைக்கிள் மரதன் போட்டியில் சாதிக்கத்துடிக்கும் நபர்! குவியும் வாழ்த்துக்கள்
இலங்கைத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் நெடுந்தூரப் போட்டியான Solo 24 hour என்ற சைக்கிள் மரதன் போட்டியில் துரை கோபிநாத் இவ்வாண்டு கலந்து கொள்கின்றார்.
சென்ற ஆண்டு நடைபெறவேண்டிய போட்டியானது காலச்சூழல் மாற்றத்தினால் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
அஞ்சல் ஓட்டமுறையில் பதினெட்டு அணிகளுடன் ஒரு அணியில் ஐவர் என்ற முறையில் 600 கிலோமீற்றர் தூரங்களை ஓடி கோபிநாத்தின் அணி ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டது.
இவ்வாண்டு கோபி அவர்கள் Solo 24 hour 600 கிலோமீற்றர் தூரங்களை தனிநபர் போட்டியில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகி இலங்கைத்தீவின் மறுமுனையில் டொன்றுறா என்னும் இடத்தில் நிறைவடைய இருக்கின்றது.
அசாத்தியமானவற்றை கனவுகண்டு வாழ்நாட்களைக் கடந்து செல்லாமல் நினைத்ததைச் சாதிக்கத்துடிக்கும் என்னகத்து நண்பனுக்கு எனது வீரவாழ்த்துகள்.
செல்லுமிடமெங்கும் உன் பின்பலத்தில்
நாமிருக்கின்றோம் என்ற எண்ணத்தோடு தீராத வேட்கையோடு பயணித்து வென்றாக வேண்டும் Vaikunthan Selvam Sei Selvarajah என்பவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இந்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.