உலகின் மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் நோய் தொடர்பாக கண்காணிக்கும் அமைப்பான யுனைட்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2025 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த 21 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி இலங்கையின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகளின்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் நாட்டின் பதிவான புதிய எச்.ஐ. வி தொற்றுகளின் எண்ணிக்கை 48 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

மேலும் எச்.ஐ.வி தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சைப் பெறுவது முக்கியமாகியுள்ளதுடன் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிகாட்டுகின்றன.