ஊழல் மதிப்பு சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த முன்னேற்றம்
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
2025 ஆண்டில் 35 புள்ளிகளைப் பெற்று 107வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு 32 புள்ளிகளுடன் 121வது இடத்தில் இருந்த இலங்கை, 14 இடங்கள் முன்னேறி 2025 ஆண்டில் 107வது இடத்தைப் பிடித்துள்ளது.

மதிப்பெண்
இதன் மூலம் இலங்கையில் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் அதிகபட்ச மதிப்பெண் 40 ஆகவும், குறைந்தபட்ச மதிப்பெண் 36 ஆகவும் பதிவாகியுள்ளது.
இப்பட்டியலில் டென்மார்க் 89 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் 09 புள்ளிகளுடன் 181வது இடங்களைப் பெற்றுள்ளன.