போராட்டத்திற்கு ஆப்பு வைக்கவுள்ள இலங்கையின் முக்கிய புள்ளிகள்!
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரியே இளைஞர்கள் கொழும்பு காலி முகத்திடலில் இருபது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் மனிதாபிமான பிரச்சினைகளுக்கான அந்த இளைஞர்களின் கோரிக்கைகளுக்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் கூடச் செவிசாய்க்கவில்லை என்பதையே மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகப் போகும் செய்தி கட்டியம் கூறி நிற்கின்றது.
அதாவது மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகி புதிய ஒருவர் பிரதமராகப் பதவியேற்றுப் புதிய அமைச்சரவை ஒன்று மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் உருவாகுவதையே ரணில், சஜித் ஆகியோர் மறைமுகமாக விரும்புகின்றனர் என்பதையும் வெளிப்படையாக உணர முடிகின்றது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பொது நிதி நிறுவனங்களும் அமெரிக்க- இந்திய அரசுகளும், ராஜபக்ச அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சியைத் தற்காலிகச் சீர்திருத்தமாக நம்பிச் செயற்படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.
அப்படியானால், காலிமுகத்திடலில் நின்று போராடும் இளைஞர்களின் கோரிக்கைக்குப் பதில் என்ன? அகிம்சை வழியில் போராடும் இளைர்கள், சிங்கள ஆட்சியாளர்களிடம் தோல்வியடைப் போகின்றனரா? இந்தப் போராட்டத்துக்கு ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல ரணில், சஜித் மகாநாயக்கத் தேரர்களும் ஆப்பு வைக்கவுள்ளனர் என்பதையே தற்போதைய அரசியல் நகர்வுகள் சுட்டிகாட்டுகின்றன.
சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தற்போது முரண்பாடுகளில் உடன்பாடாகக் கூட்டுத் தேவையும் கூட்டு ஒற்றுமையும் அவசியமாகின்றன. இதனையே மகிந்த பிரதமர் பதவி விலக எடுத்த முடிவு தெளிவாகச் சித்தரிக்கின்றது.
அமெரிக்க- இந்திய புவிசார் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவுக்கும் இது ஆறுதல் தரும் செய்திதான். ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் பகடைக் காயாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரணில், சஜித், சந்திரிகா ஆகியோர் தங்கள் தங்கள் கட்சிகளை மீளவும் புதுப்பித்து தமக்கிடையயேயான முரண்பாடுகளையும் சிர் செய்து மீள எழுக்கூடிய முறையிலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் இந்தத் தற்காலிகத் தீர்வை, அதாவது மகிந்த பதவியில் இருந்து வலகிப் புதிய பிரதமர் தெரிவாவதை விரும்புகின்றனர்.
எனவே விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வது என்பதெல்லாம் இரண்டாம் கட்ட விவகாரமாகவே மாறியுள்ளது. என இலங்கையின் முத்த ஊடகவியாளர் Amirthanayagam Nixon என பதிவிட்டுள்ளார்.
