இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையின் ஆபத்தான நபர்
சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து இன்று (24) பிற்பகல் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அழைத்து வரப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன்,மேலதிக விசாரணைகளுக்காக அவர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள்
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபருக்கு எதிராக பல கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.