உலக வங்கியிடம் ஓடும் இலங்கை!
இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியின் உதவியை இலங்கை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ஏற்கனவே பல திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் அமெரிக்காவில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைய காரணமான கடன் சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதேவேளை இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.