இலங்கை பேரிடர் உதவி ; பாகிஸ்தான் விமானத்திற்கு அனுமதி வழங்கிய இந்தியா
இலங்கையில் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி கோரியதை, இந்தியா திங்கட்கிழமை விரைவாகத் தீர்மானித்து அனுமதி வழங்கியதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான, “இலங்கைக்கு உதவி அனுப்ப இந்தியா வான்வெளி அனுமதி வழங்கவில்லை” என்ற தகவல்கள் தவறானவை என்றும், “போலி செய்திகள்” என்றும் வட்டாரங்கள் தெளிவுபடுத்தின.

பாகிஸ்தான், இந்திய நேரப்படி திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில், இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் விமானத்துக்கு இந்திய வான்வெளி பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அதிகாரப்பூர்வ கோரிக்கை அனுப்பியுள்ளது.
உதவி இலக்காக இலங்கை இருப்பதால், அந்த கோரிக்கையை இந்தியா அவசரமாக பரிசீலித்து, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கை வெறும் நான்கு மணி நேரத்திலேயே செயல்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.