உலகளவில் மூன்றாவது இடத்தினை பிடித்த இலங்கை!
உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹென்கியின் (Steve Hanke) மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும், இரண்டாவது இடத்தில் லெபனானும் மூன்றாவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது.
In this week's inflation roundup,#Venezuela takes the 4th spot. Inflation in VNZ remains one of the highest in the world, which I measured at 107%/yr on May 19. Official dollarization is Venezuela's only hope. pic.twitter.com/SdmCjESKgk
— Steve Hanke (@steve_hanke) May 24, 2022
அதேவேளை கடந்த பெப்பிரவரி மாத்தில் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.