சுற்றுலாத் தலங்களில் நான்காவது இடத்தைப் பிடித்த இலங்கை!
2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் நான்காவது இடத்தைப் இலங்கை பிடித்துள்ளது.
“Flash Pack” பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி “Forbes” வணிக இதழ் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் ஜப்பான், அர்ஜென்டினா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.
2,068 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்
அதோடு பல பொருளாதார நெருக்கடிக்கு பிறகுஇ இலங்கை தற்போது சுற்றுலாத் துறையில் முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று Avadia இணையத்தளத்தின் இலங்கை பற்றிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி 2023ஆம் ஆண்டில் 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் இலங்கைக்கு கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,068 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.