மாகாண ஆளுநர்களுக்கு நிதியமைச்சர் விடுத்த அதிரடி பணிப்புரை!
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர்களின் பங்குபற்றுதலுடன் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது இடங்களில் மின்சாரப் பாவனை தொடர்பான விசேட கலந்துரையாடல் Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பொது இடங்களில் மின்சாரப் பாவனையை 20 வீதத்தால் குறைக்குமாறு மாகாண ஆளுநர்கள் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) வடமாகாண அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.