இலங்கை வெளிநாடுகளுக்கு வழங்கிய 30 பில்லியன் டொலர்கள்! வெளியான பகீர் தகவல்
ஒரு ஜனநாயக கட்டமைப்பில் நாட்டை ஆண்டு, இன்று நாம் நாட்டை 55 பில்லியன் டொலர் கடனுடன் முன்னோக்கி நகர்த்த முடியாமல் பாரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு 30 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் 55 பில்லியன் கடன். இருப்பினும் 30 பில்லியன் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. யார் வழங்கினார்கள் என்று எதுவும் தெரியாது.
உண்மையில் வெளியில் வழங்கப்பட்ட டொலர்களை பெறும் வழி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இவற்றை நடைமுறைப்படுத்தியது ஐக்கிய நாடுகள் சபையும், உலக வங்கியும். இதனை “STAR” ( STolenstAte Recovery) என்று கூறப்பட்டது. பல நாடுகளில் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணம் இம் முறையினால் மீள பெறப்பட்டன.
இவ் STAR ஐ அமுல்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஊடகங்களில் மூலம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் வரும் அரசாங்கம் இதை அமுல்படுத்த கோர வேண்டும்.
நான் இவ் STAR நிறுவனத்திற்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளோம். ஒரு மில்லியன் கையொப்பங்களை பெற்று தருமாறு கோரி ஒப்பந்தத்தின் அடிப்படையில், இவ் கையொப்பங்களை அதிகளவில் பெறும் வகையில் கொள்ளையடித்த பணத்தை மீண்டும் பெற முடியும். எங்கு தப்பி சென்றாலும் பணத்தை மீட்டெடுக்க முடியும்.
யார் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை, இவற்றை மீட்டெடுக்க வேண்டும். நாட்டில் குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். எனவே கொள்ளையடித்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும். எனவே கையொப்பங்களை பெற்று தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.