நாட்டு மக்களுக்கு அதிரடி உரையை ஆற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya rajapaksa) நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு நாளை புதன்கிழமை (16-03-2022) இரவு 8.30க்கு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உரையாற்றுவது தொடர்பிலான நேரம், இன்றைய தினமே அறிவிக்கப்பட்டது.
இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி உரையாற்றும் நேரத்தில், பல இடங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்றும் அறியமுடிகின்றது.
இந்நிலையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அட்டவணையின் பிரகாரம், நாளை (16-03-2022) இரவு 8.30 மணிமுதல் 21.45 மணிவரையிலும் ஜே.கே.எல் ஆகிய வலயங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
இதேவேளை, கீ, ஆர்,எஸ் ஆகிய வலயங்களில், இரவு 19.15 முதல் 21 மணிவரையிலும் மின்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.