இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பு விபரம் வெளியீடு!
இலங்கையில் இன்றைய (19-01-2023) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதி இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.