இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான மற்றொரு அறிவிப்பு!
தற்போதைய மின் நெருக்கடிக்கு திட்டமிட்ட மின் நிலைய திட்டங்களை அமுல்படுத்த முடியாதமையே பிரதான காரணம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake ) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒன்றரை மாதங்களில் மின்வெட்டு தேவையிருக்காது என தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சப்புகஸ்கந்த அனல்மின் உற்பத்தி நிலையத்தின் ஏ ஆலை இன்று (29-01-2022) காலை எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழந்தது. இதனால், 48 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், இன்று இரவு மின்சாரத் தேவை 2,630 மெகாவோட் ஆக இருக்கும் என இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கிறது. எனவே, மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோர்களை இலங்கை மின்சார சபை கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார பாவனையை குறைப்பதற்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளது.