இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாருக்கு வாகனங்கள்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறைக்கு 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இலங்கை காவல்துறையினரால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையை விரைவுபடுத்துவதும் நெறிப்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும்.
ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 250 ஜீப்புகள், செப்டம்பர் இறுதிக்குள் 250 ஜீப்புகள், 2023 மார்ச் இறுதிக்குள் 25 ஜீப்புகள் என மூன்று கட்டங்களாக இந்த ஜீப்புகளின் விநியோகம் செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 2.5 பில்லியன் என கூறப்படும் அதேவேளை, அதேவேளை இதுவரை இலங்கைப் பொலிஸாருக்கு 2000 முச்சக்கர வண்டிகள், ஜீப்புகள் உட்பட 72 ஜப்பானிய உதவி வாகனங்கள் மற்றும் 150 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.