உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ள இலங்கை!
இலங்கையில் கொரோனா தடுப்பூசி குறுகிய காலத்திற்குள் 14 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலக சாதனையை படைக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் அளவு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 52.5 மில்லியன் செலவில் வாங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் 3.5 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கூடுதலாக பெறுவோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலைப் பின்பற்றாமல் தனிப்பட்ட தொடர்புகள் அடிப்படையில் பலருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் ரமேஷ் பதிரண கூறினார்.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 12 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.