இலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஏதேனும் ஒரு காரணத்திற்காக கொரோனா முதலாம் தடுப்பூசியை இன்னமும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் அதற்கான காரணத்தை முன்வைத்து தமது பிரதேசங்களில் தமக்கான முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அச்சமின்றி தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என வைரஸ்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைமைகள் குறித்த அவதானிப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டுள்ளது. ஆனால் அந்த நாடுகள் சரியான தரவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Omicron வைரஸ் தொற்றாளர்களும் அதேபோல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்களின் தரவுகளில் வெளிப்படுகின்றது. கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
ஆனால் ஓமிக்ரோன் வைரஸ் டெல்டா வைரஸை பரவும் வீரியம் குறைந்ததாகும். ஆரம்பகட்ட ஆய்வுகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Omicron வைரஸ் தொற்றாக இருந்தாலும் அல்லது கொரோனா வைரஸ்களின் வேறு ஏதேனும் ஒரு வைரஸ் தொற்றாக இருந்தாலும் அதற்கும் வழங்கும் சிகிச்சை முறைமை ஒன்றேயாகும்.
Omicron புதிய பிறழ்வு பரவல் தாக்கத்தை ஏற்படுத்திய பின்னரே எம்மால் இந்த சவால்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும். சர்வதேச ஆய்வாளர்களும் அதனையே சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்த பாரிய சவால்கள் இன்று இல்லை, ஏனென்றால் சகலரும் தடுப்பூசி பெற்றுக்கொள்கின்றனர். பூஸ்டர் தடுப்பூசிகளும் பெற்றுக்கொள்கின்றனர். எனவே எம்மால் விரைவாக வைரஸ் தாக்கங்களில் இருந்து விடுபட்டுக்கொள்ள முடியும்.
மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் Omicron வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியும். எதிர்காலத்தில் தாக்கம் அதிகரிக்கும் என்றால் மாற்று வழிமுறை என்னவென்பதை அறிவிக்கப்படும்.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக முதலாம் தடுப்பூசியை இன்னமும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் அதற்கான காரணத்தை முன்வைத்து தமது பிரதேசங்களில் தமக்கான கொரோனா முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அச்சமின்றி தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.