இலங்கையில் மேலுமொரு முக்கியஸ்தரின் வீடும் முற்றுகை!
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் (Wimal Weerawansa) வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், நள்ளிரவு தாண்டியும் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது பல முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக முற்றுகையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.