மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் இருந்த தியவன்னா ஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று (27-01-2023) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ வீதியைச் சேர்ந்த எஸ். சயுர ஜுமா என்ற 18 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.
இவர் மேலும் 3 நண்பர்களுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள தியசரு தோட்டத்திற்கு அருகில் வந்து, தியவன்னா ஓயாவை சுற்றி கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியை அத்துமீறி நுழைந்து நேற்று (26-01-2023) காலை படகின் உதவியுடன் தியவன்னா ஓயாவிற்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, இரண்டு யுவதிகள் பயணித்த படகு கவிழ்ந்த நிலையில், இளைஞர் ஒருவர் நீந்தி கரைக்கு சென்ற நிலையில், மற்றைய இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போனார்.
இந்த நிலையில் இன்று குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.