இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கையில் அடுத்து ஆட்சியை பிடிக்கக்கூடிய வல்லமை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே உள்ளது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது ஆண்டு விழா இன்றைய தினம் (02-09-2022) மஹரகமவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விழவில்லை. அது நிச்சயம் மீண்டெழும். அடுத்து ஆட்சியை பிடிக்ககூடிய சக்தி நாம்தான்.
மேலும், ஐக்கிய தேசியக்கட்சி பூஜ்ஜிய நிலைக்கு சென்றது. ஆனால் அந்த கட்சியின் தலைவர்தான் இன்று ஜனாதிபதி.
எனவே, நம்பிக்கையை கைவிட வேண்டாம்.
குறிப்பாக,கட்சியின் யாப்பை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் மைத்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.